மேஷம்
ராசிக்கு சிறந்த நாட்கள்: 8, 9, 10, 18, 19, 26, 27. பாதக நாட்கள்: 1, 2, 16, 17, 22, 23, 28, 29, 30.
அஸ்வினி: குறைந்த அறிவு பெற்றிருப்பினும் அதனைப் பயன்படுத்துவதே எல்லையில்லா பெருமை சேர்க்கும். இம்மாதம் ராகு மிதுனத்தில், செவ்வாய் கன்னியில். எனவே அரசு சார்ந்த- நீதி சார்ந்த எல்லா விவகாரங்களும் வெற்றியை நாடிச் செல்லும். சூரியன், புதன் இருக்கை சீராக இல்லை. இப்போது வயது 13, 29, 41, 45, 64, 75, 86 எனில் குடும்பம் மொத்தமாக சுற்றுலா செல்வதைத் தவிர்க்கவேண்டும். ஆண் சந்ததிகளுக்கு காதில் உபாதைகள் வரும். வீட்டிற்கு வெளியே வராண்டா இருந்தால் ஒரு சமச்சதுர செம்பு உலோகத் துண்டைப் பதிக்கவும். நெருங்கிய நண்பர்கள் 13, 15 தேதிகளில் உங்களை நாடி உதவிகேட்டு வருவார்கள். பல தொல்லைக்குப் பரிகாரம்- நெருப்பை வளர்த்து அதில் பாலைத் தெளித்து அணைப்பது போதும்.
பரணி: பிறர் கர்வத்தை மாற்ற அன்பு ஒன்றே நல்மருந்து. ராசிக்கு 7-ல் சுக்கிரன் வீட்டில் புதன், சூரியன். இல்லாளின் மனநிலையில் மாற்றம் தெரியவரும். குழந்தைகளாலும் வேதனை. கருப்புநிறப் பசுவுக்கு உணவூட்டல் நல்ல பரிகாரம். வீட்டு வாசலில் ஒரு சமச்சதுர செம்புத்தகட்டைப் புதைப்பதும் நல்லது. வியாபாரிகளுக்கு 22, 23 தேதிகள் லாபகரமாக அமையும். இம்மாதம் ஆண் குழந்தை பிறந்தால் சூரிய வணக்கம் மிக நன்று. இம்மாதம் மட்டும் இரவில் பால் அருந்தவேண்டாம். 24 வயதைக் கடந்த மருத்துவ மாணவர்கள் சுயமாகத் தொழில் தொடங்கலாம். புதன்கிழமை ராகு காலத்தில் வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்கவும். குரு பெயர்கிறார். செம்பவள மோதிரம் (ஈர்ழ்ஹப்) அணிதல் நல்லது.
கிருத்திகை 1-ஆம் பாதம்: பயன்தரும் காரியத்தை உடனே செய்து முடிக்கவேண்டும். இம்மாதம் சுறுசுறுப்பாக செயல்படவேண்டும். முதல் வாரம் அசையா சொத்து வாங்கலாம்; விற்கலாம். ராகு மூன்றில் தனித்து, கேது, சனி, குரு பார்வையில் உள்ளார். எனவே எவ்வளவு கடன் தொல்லை இருந்தாலும் சமாளித்துவிடலாம். உடன்பிறந்த சகோதரிக்கு இப்போது 22, 23 வயதெனில் நீங்கள் சில பொறுப்புகளை அவருக்காக எதிர்கொள்ள நேரிடும். வியாபாரிகள் இம்மாதம் சனிக்கிழமைகளில் எந்த விரிவாக்கமும் செய்யாதிருத்தல் நல்லது. வீட்டைப் பூட்டிவிட்டு நெடுநாள் வெளியூர் செல்வோர் தகுந்த காவலாளியை நியமித்துச்செல்லல் நன்று. வடக்கு வாசல் எனில் பாதிப்பு அதிகமாகும்.
ரிஷபம்
ராசிக்கு சிறந்த நாட்கள்: 1, 2, 11, 12, 20, 21, 28, 29, 30. பாதக நாட்கள்: 3, 4, 5, 18, 19, 24, 25.
கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள்: இம்மாதம் வடிவத்திலும், வம்சத்திலும், கல்வியிலும், செல்வத்திலும் குறைந்தவர்களை தரம்தாழ்த்திப் பேசுவது கூடாது. சுக்கிரனின் பார்வை உங்கள் ராசிமேல் உள்ளது. மாதத்தின் முதல் வாரம் ஒரு பிரிவுச்செய்தி மனம் வருந்தச் செய்யும். முதல் வாரமே வியாபாரம் செழிப்பாகும். அலுவலகப் பணியாளர்கள் 6, 7 தேதிகளில் பிறரின் அமோக ஆதரவைப் பெறலாம். பூர்வீகச் சொத்தில் எந்த லாபத்தையும் எதிர்பார்க்க வேண்டாம். மீன் பண்ணை, தொட்டியில் மீன் வளர்ப்போர் அதனைப் பாதுகாக்க குப்பைமேனி சாற்றை நத்தை ஓட்டுப் பொடியுடன் கலந்து தூவினால் இனம் பெருகும். இம்மாதம் சிற்றின்பத் தாக்கம் மிகும். சுக்கிரன் ராசிக்கு 8-ல், இரண்டாமிடம் சுத்தம். 25 வயதுள்ள ஆண்கள் திருமணம் செய்தல் கூடாது. மனைவியால் தொல்லை மிகுதியாகும்.
ரோகிணி: எல்லா முக்கிய காரியங்களிலும் அவசியமானது மனசாட்சியே. அதனை சோதிக்கும்விதமாக உற்றார்- உறவினர் பகையுணர்வுடன் உறவாடுவார்கள். சமாளிக்கவேண்டும். செவ்வாய் தந்தையின் உடல் ஆரோக்கியத்தை பாதிப்பார். கொஞ்சம் பார்லி அரிசி, ஒரு தேங்காய் ஆகியவற்றை வெள்ளைத்துணியில் முடிந்து திருஷ்டிசுற்றி ஓடும் நீரில் போடுவது நல்லது. சூரியன் ராசிக்கு 6-ல். மகன்- தந்தை உறவில் பின்னடைவு, பணிபுரியுமிடத்தில் கூடாநட்பால் பதவி பறிபோதல் போன்றவை ஏற்படலாம். கண்ணில் குரங்கு தென்பட்டால் பழுப்புநிற கேக் வாங்கி உணவாகக் கொடுப்பது நல்லது. விமான ஓட்டிகள், மெரைன் இன்ஜினீயர்கள் இம்மாதம் அவ்வப்போது ரத்த அழுத்தத்தை சோதிப்பது நல்லது.
மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்: இம்மாதம் சகிப்புத்தன்மையும், ஆற்றலும் நற்பலனைப் பெற்றுத்தரும். இம்மாதத்தில் 15 நாட்கள் வருமானத்திற்குப் பேருதவியாக செயல்படும். ராகு தொல்லை தருவார். மின் உபகரணங்களை கவனமாகச் செயல்படுத்தவேண்டும். கூரான இரும்புக் கருவிகளும் காயங்களை ஏற்படுத்தும். கோமேதக மோதிரம் இருந்தால் அணிந்து தற்காத்துக்கொள்ளலாம். செந்தாமரைப் பூவால் விநாயகப் பெருமானை வணங்குவதும் போதுமானது. 28, 29, 30 தேதிகளில் திடீரென அதிக செலவினங் களை எதிர்கொள்ள நேரிடும். சனி ராசிக்கு 8-ல் கேது, குருவுடன் இருக்கிறார். மதுப்பிரியர்கள் போதையுடன் வாகனம் ஓட்டுவதைத் தவிர்த்தல்வேண்டும். வலதுகை சுட்டு விரலில் வெள்ளி மோதிரம் அணிதல் நற்பலன் தரும்.
மிதுனம்
ராசிக்கு சிறந்த நாட்கள்: 3, 4, 13, 14, 22, 23. பாதக நாட்கள்: 6, 7, 20, 21, 26, 27.
மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள்: இம்மாதம் ஆரம்பம் உன்னதமாகும். பின்பு உங்களுடைய குடும்பத்தைப் பிறர் விமர்சிக்கும்விதமான நிகழ்வுகள் தொடரும். இறுதியில் எல்லாமே சுகம். 3, 4 தேதிகளில் சந்திரனின் பேராதரவு கிடைக்காது. வியாபாரத்தில் பிறர் ஆலோசனையைத் தவிர்க்கவும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நெருக்கடிகளை உருவாக்கும். ராசிக்கு 5-ல் புதன். தந்தையின் பூர்வீக சொத்தை இம்மாதம் விற்பனை செய்தல் கூடாது. பயணங்களில் பாலங்களைக் கடக்கும்போது கவனம்வேண்டும். கீழாநெல்லி மாலைகட்டி பைரவருக்குச் சாற்றி வழிபாடு செய்துவந்தால் தோஷம் நிவர்த்தியாகும். எட்டி இலை, எட்டி விதை (மூலிகை) மாலை தொடுத்து பைரவருக்கு சமர்ப்பித்து வழிபட, துர்தேவதைகளின் இன்னல்கள் அடியோடு மறைந்துவிடும்.
திருவாதிரை: திருமண விஷயங்களை வாலிபத்தினரின் தீர்மானத்துக்கு விட்டுவிடக்கூடாது. குரு, சனி, கேது வில்லங்கத்திற்குத் துணைபுரிவார்கள். பெண்குழந்தை பிறந்தால் தந்தையின் நிலைமை பின்னடைவாகும். குலதெய்வத்தை வணங்குவதால் நன்மைகள் அதிகரிக்கும். வரதட்சணைக்கு ஆசைப்பட்டு இனம்மாறி, குலம்மாறி ஜோடிசேர்வது, சிலருக்கு மாமனா ரிடம் நல்லவிதமாகப் பேசி வெற்றிக்கும் வழி பிறக்கும். டோபாஸ் ராசிக் கல் (மஞ்சள் புஷ்பராகம்) அணிவதால் குருவருளால் நல்லவை நடக்கும். நீண்டநாள் திருமணம் சார்ந்த தொல்லை தொடர்ந்தால், 16 லிட்டர் மழை நீர் அல்லது ஆற்று நீரை செம்புக்குடத்தில் நிரப்பி, வீட்டில் தென்கிழக்கு பாகத்தில் இருக்கச்செய்வது நல்லது. வாஸ்துக்குறை அகலும்.
புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்: பெண்களுக்கும் மாணவர்களுக்கும் சிறப் பான மாதம். சிலருக்கு வெளியூர், வெளிநாடு செல்லும் ஆசை நிறைவேறும். மகன் இருப்பின்- அவருக்கு வயது 24 எனில் அவர் தனியாக சுயசம்பாத்தியத்தை எதிர்கொள்ள கேது உற்ற துணைபுரிவார். கலைஞர்கள், படத்தயாரிப்பாளர்கள், தொலைகாட்சித் தொடர் உருவாக்குவோருக்கு இம்மாதம் நல்ல சந்தர்ப்பம் நாடிவரும். தடைகள் ஏற்பட்டால் மூன்று வெற்றிலையில் நான்கு சிவப்புநிறப் பூக்கள், ஒரு எலுமிச்சைப் பழத்தை பிரதோஷத்தன்று திருஷ்டிசுற்றி ஓடும் நீரில் போடவும். கிரகநாதர்கள் தடைகளை அகற்றுவார்கள். வில்வ இலையை நீரில் போட்டுக் குளித்தாலும் கெடுதி போகும்.
கடகம்
ராசிக்கு சிறந்த நாட்கள்: 6, 7, 16, 17, 24, 25. பாதக நாட்கள்: 1, 2, 8, 9, 10, 22, 23, 28, 29, 30.
புனர்பூசம் 4-ஆம் பாதம்: எத்தகைய செயல்களை மேற்கொண்டாலும் அவை யாவும் வெற்றிக்குப் பாதையமைக்கும். வாஸ்துரீதியாக வடதிசையிலிருந்து நல்ல சேதிகள் வரும். காலநிலை சார்ந்த உடல் உபாதை வந்து மறையும். குடும்பத்தாரிடம் இருந்து சில அசுபச் செய்திகள் வரும். 11, 12 தேதிகளில் வருமானம் அதிகரிக்கும். சிலர் புது வாகனம் வாங்கலாம்; மாற்றமும் செய்யலாம். செவ்வாய்க்கிழமையன்று மாலை கோவிலுக்குச் சென்று காலபைரவருக்கு பூசணியில் மிளகு தீபமேற்றி வழிபட்டால் இழந்த பொருட்கள் கைக்கு வந்துவிடும். 15-ஆம் தேதிக்குமேல் டென்ஷனாகக் காணப்படுவீர்கள். மூன்று காரட்டில் ஓபல் மோதிரம் அணிவதால் நீண்டநாள் பிரச்சினை அகலும்.
பூசம்: இம்மாதம் உங்களுடைய மனோசக்தி பக்கபலமாக செயல்படும். வருமானத்திற்கு வழிசெய்ய வேண்டியவர் செவ்வாய் கன்னியில் உள்ளார். அலுவலகப் பணியாளர்களுக்கும் பிற ஊழியர்களுக்கும் உடல் அசதி சோம்பலை அதிகரிக்கச் செய்யும். ஆலமரத்து வேரின் மேல் மண்ணில் பாலும் இனிப்பும் கலந்து ஊற்றி, மண்ணைக்கிளறி, அந்த மண்ணை எடுத்துவந்து திலகமிட்டால் துன்பங்கள் அகலும். குடும்பத்தில் பிறருக்கு ஆரோக்கியத்தில் பின்னடைவு ஏற்பட்டால், ஒருசிறு மண்குடுவையில் தேனை நிரப்பி, துணியால் மூடிக்கட்டி செவ்வாய் இரவு வீட்டின் மேற்கில் வைத்து, அடுத்த நாள் சுடுகாட்டில் அல்லது இடுகாட்டில் வீசிவிட்டால் கர்மவினையால் வந்த துன்பம் விடைகொடுக்கும்.
ஆயில்யம்: மாணவ- மாணவிகளை மூன்றாவது வாரம் எந்த நிர்பந்தமும் செய்தல் கூடாது. பரம்பரை சொத்துக்கான பாகப் பிரிவினை இம்மாதம் ஒத்து வராது. உடன் பிறந்தோர் பிரச்சினை கவலைக்கு வழி வகுக்கும். வியாபாரம் மற்றும் தொழிலில் 22, 23-ஆம் தேதிகளில் வருமானம் அதிகரிக்கும். இளம் காதலர்களுக்கு 28, 29, 30 ஆகிய தேதிகள் பக்கபலமாக அமையும். திருமணம் புரிந்தோருக்கு சுக்கிரனின் இருக்கை சீராகத் தென்படவில்லை. மாற்றான் தோட்டத்து மல்லிகையை நாட மனம் அலைபாயும். பிற மாதுடன் நட்பு கொண்டு அதனால் சிசு பிறந் தால், முதல் மனைவியின் ஆரோக்கியம் பாழாகும். கன்று ஈன்ற கருப்புநிறப் பசுவுக்கு புல், கீரை வழங்குதல் நன்று.
சிம்மம்
ராசிக்கு சிறந்த நாட்கள்: 8, 9, 10, 18, 19, 26, 27. பாதக நாட்கள்: 3, 4, 5, 11, 12, 24, 25.
மகம்: ஏதோவொரு முக்கிய நபரைச் சந்திப்பதன்மூலம் வாழ்வின் தரம் உயரும். குடும்பத்தில் தம்பதியரிடையே கருத்து வேறுபாடு நிலவும். அப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் எந்த முடிவும் வேண்டாம். கேது பகவான் தனுசில் இருப்பதால் இரு மகன்கள் உள்ள குடும்பத்தில் தாய்- தந்தையருக்கு அவர்களால் பேருதவி கிடைக்கப்பெறும். வெண்மை அல்லது சிவப்புநிறப் பொருட்களை தானம் செய்வது நன்று. அசையா சொத்தில் இருக்கும் வில்லங்கத்தை கேது பகவான் சீர்செய்வார். ரியல் எஸ்டேட் வியாபாரம் புரிவோருக்கு சிறந்த மாதமாகும். நீலநிற ஆடையைத் தவிர்க்கவும். வயது 48 எனில் சுயசம்பாத்தியத்தில் வீடுகட்டும் முயற்சியை மாற்றுவது நல்லது.
பூரம்: சிறுசிறு சச்சரவுகளுக்காக உறவினர் களுடன் இம்மாதம் பகையுணர்வு கூடாது. இரண்டாவது வாரம் நேர்மையை ஓரம் கட்டிவிட்டு தந்திரமாக செயல்படவேண்டும். குடும்ப சுபநிகழ்ச்சிகளில் அதிக செலவினங் களை எதிர்கொள்ள நேரிடும். தேவையற்ற விவகாரங்களில் தலையீடு வேண்டாம். இம்மாதம் வெள்ளி உலோக டம்ளர் அல்லது பாத்திரங்களில் பானகங்கள் பருகினால் சனியின் கெடுதல் அகன்றுவிடும். கருப்புநிறக் குடை மண்ணெண்ணெய் ஸ்டவ்வை இல்லாதோருக்கு சனிக்கிழமை தானம் செய்தால் தடைகள் அத்தனையும் போய்விடும். பாதாம் பருப்புத்தூளால் பல் துலக்கினால் புதன் அருளால் வருமானம் அதிகரிக்கும். இம்மாதம் 15 நாட்கள் பணவரவை எதிர்பார்க்கலாம்.
உத்திரம் 1-ஆம் பாதம்: "நான் பிறக் கும்போதே அறிவாளியாகப் பிறக்கவில்லையே' என்று வேதனைப்படும் விதமாக சில சூழ்நிலை மனம் வருந்தச்செய்யும். இதற்குக் காரணம் ராகுவும், சந்திரனும்தான். செவ்வாயும் புதனும் ஒன்றாகச் செயல்படுவதால் சிறு பொருட்களாவது காணாமல் போகலாம்; திருடப்பட நேரலாம். இம்மாதம் திருமணம் ஈடேறினால் நான்கு வருடம் செழிப்பாக அமையும். இம்மாதம் வீட்டில் சுவரில் எங்காவது விரிசல் தென்பட்டால் மனைவிக்குத் தொல்லை வரும். அதனை சீர்செய்ய வேண்டும். திருமணமாகி இப்போது வயது 22, 24, 29, 32, 39, 47, 51 அல்லது 80 எனில் வெள்ளிக்கிழமை அம்மன் கோவில் சென்று மனைவி பெயரில் அர்ச்சனை செய்வது மிக நல்லது. கிரகநாதர்கள் பேரருளால் குடும்பம் சிறப்பாகும்.
கன்னி
ராசிக்கு சிறந்த நாட்கள்: 1, 2, 11, 12, 20, 21, 28, 29, 30. பாதக நாட்கள்: 6, 7, 13, 14, 16, 27.
உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள்: தெரியாதவற்றைத் தெரியாது என திடமாகக் கூறவேண்டிய மாதம். மூத்த சகோதரர்கள் இருந்தால் உதவி செய்ய முயல்வார்கள். சுயசம்பாத்தியத்தில் வெற்றிபெற செவ்வாய்க்கிழமைகளில் விரதம் கடைப்பிடிக்கவேண்டும். வியாபாரிகளுக்கு கலப்படப் பொருள் விற்பனை கெடுதலை மிகையாக்கும். சனியும் குருவும் இணைந்து காணப்படுவதால், இரவு இருட்டு வேளையில் புதர்களில் நடப்பது கூடாது. அரவம் பதம் பார்க்கும். இடது கைவிரலில் வெள்ளியிலான மோதிரம் அணிதல் நல்ல பரிகாரம். மகனின் கல்வி மேம்பாட்டில் தடை ஏற்பட்டால், கேட்ஸ்-ஐ (வைடூரியம்) மோதிரம் அணிதல் நன்று. மூன்று கேரட் போதுமானது. விநாயகரை சிவப்புநிற மலர்களால் பூஜிப்பது நன்று.
ஹஸ்தம்: கள்ளத்தனம் அதிகமாகும்போது கூர்ந்து கவனிக்கவேண்டும். குரு, சனி, கேதுவுடன் சேர்க்கை. எனவே வயதுக்கு வந்த பெண்களின் செய்கையை இம்மாதம் கண்காணிப்பதால் வரும் கெடுதலை சீர்செய்யலாம். சூரியன் நன்மதிப்பை அதிகரிப்பார். அலுவலகப் பணியாளர்கள் 20, 21 தேதிகளில் உழைப்புக்கேற்ற மதிப்பைப்பெற இயலாது. இம்மாதம் பகலில் ஆண் குழந்தை பிறந்தால் சூரியனின் ஆதரவு மிதமாகும். எனவே பெயர் சூட்டும்போது பச்சைக்காய்கள், பழங்களை சமூகக்கூடம் அல்லது குழந்தைகள் கூடும் இடங்களில் விநியோகித்தல் நன்று. ஆரோக்கியக்குறைகள் தொடர்ந்தால் நூறு கிராம் சூரியகாந்தி விதையை திருஷ்டிசுற்றி ஈரப்பதமுள்ள இடங்களில் தூவலாம்.
சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்: "எனக்கு மனைவியோ மக்களோ இல்லை; ஒரு வீடு இல்லை; வருமானமே இல்லை' என்று ஏங்குபவர்களுக்கு குரு, கேது, சனி நல்ல செய்தியைத் தருவார்கள். 22, 23 தேதிகளில் நல்லவை நடக்கும். மகாவிஷ்ணு, தன்வந்திரி பகவானை வணங்குதல் நன்று. புதன்கிழமை அதிகாலை மூன்று மணிக்குமேல் நான்கு மணிக்குள்ளாக புதன்பகவானை வணங் கினால், அடிக்கடி இடமாற்றம், வீடுகள் மாறுவதைத் தவிர்க்கலாம். செவ்வாயும் புதனும் துலாத்தில்; எட்டாமிடம் சுத்தம். எனவே மாமனார் மற்றும் பூர்வீக சொத்துகளின்மூலம் செழிப்பான நிலையை எதிர்பார்க்கலாம். சிறு மண்குடுவையை வாங்கி, அதில் தேன், எள்ளை நிரப்பி, வீட்டில் தென்கிழக்கில் மூடிவைக்கவும்.
தொடர்ச்சி அடுத்த இதழில்...
செல்: 93801 73464